உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக உலக வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.உலக வானிலை ஆய்வகத்தின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.
நிலத்திலும், கடலிலும் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு கண்டமும் வறட்சி, வெள்ளம், வெப்ப அலையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. நூறு ஆண்டுக்கும் மேலாக உலக வானிலை ஆய்வகம் அறிக்கை வெளியிட்டு வருகின்றது.
கடந்த எட்டு ஆண்டுகளாக தான் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூமி தொடர்ந்து சூடாகி வருகின்றது.
பனியோடைகள் உருகுவதாலும், கடல் வெப்பம்-அடைவதாலும் கடலின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கின்றது.
இயற்கைக்கு மட்டுமின்றி மனிதர்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும். ஆசியாவிலும் ,ஐரோப்பாவிலும் வானிலை சீர்குலைவினால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.