Cinemaபிரபல நடிகர் சரத் பாபு கவலைக்கிடம்

பிரபல நடிகர் சரத் பாபு கவலைக்கிடம்

-

பிரபல நடிகர் சரத்பாபு, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு (வயது 71). உடல்நலம் குன்றிய சரத்பாபு, பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமான நிலையில் கடந்த 20ஆம் திகதி முதல் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு “வென்டிலேட்டர்” மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், இன்னும் கூடுதல் நேரம் கடந்த பின்புதான் முழுமையான தகவலை அளிக்க முடியும் என்றனர்.

தெலுங்கில் அறிமுகம்

சத்யம்பாபு தீட்சிதலு என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் சரத்பாபு, 1973ஆம் ஆண்டு ‘ராமராஜ்யம்’ என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 1977ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய “பட்டினப்பிரவேசம்” படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரவேசித்தார்.

சுமார் 50 ஆண்டு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் 200இற்கு மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட பாத்திரங்களில் தோன்றியுள்ளார்.

சரத்பாபு தமிழில் ரஜினிகாந்துடன் நடித்த முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து, கமல்ஹாசனுடன் நடித்த சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

தெலுங்கில் நடித்த முடு முல்ல பந்தம், சீதாகோக சிலுகா, சம்சாரம் ஒக சதரங்கம், அன்னய்யா, ஆபத்பாந்தவடு போன்ற படங்கள் சரத்பாபுவுக்கு பெயர் பெற்று கொடுத்தன.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...