பல தசாப்தங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் ஒரே வருடத்தில் அதிகூடிய பெறுமதியால் அதிகரித்த ஆண்டாக கடந்த வருடம் மாறியுள்ளது.
இதன்படி, உணவுப் பொருட்களின் விலைகள் 08 முதல் 15 வீதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பால்-தயிர்-பாலாடைக்கட்டி போன்ற பொருட்களின் விலைகள் சுமார் 15 சதவீத மதிப்பை பதிவு செய்து அதிகபட்ச மதிப்பில் அதிகரித்துள்ளது.
ரொட்டி மற்றும் தானியங்களின் விலைகள் 12 வீதத்தால் அதிகரித்துள்ளன – பழங்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் கிட்டத்தட்ட 05 வீதத்தால் – இறைச்சியின் விலைகள் 04 வீதத்தால் அதிகரித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு 08 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.