ஆஸ்திரேலிய போர் வீரர்களின் தற்கொலை விகிதம் பொது மக்களை விட அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
AIHW அல்லது Australian Institute of Health and Welfare 1997-2020 காலகட்டத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சதவீதமாக, 27 சதவீதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
1985 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் இராணுவ சேவையில் இணைந்த 1600 பேர் இக்காலப்பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தில் கடமையாற்றும் போது எதிர்கொள்ளும் பல்வேறு உளவியல் பிரச்சினைகளினால் இது ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.