இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் குடும்பங்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்குமாறு ஆஸ்திரேலிய மத்திய அரசுக்கு சமீபத்திய அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
ஒவ்வொரு கூடுதல் குழந்தைக்கும் ஆண்டுக்கு $15,000 உதவித்தொகை பெறப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.
இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 68 மில்லியன் டாலர்கள் செலவாகும்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்த பரிந்துரையை ஏற்குமா என்பதை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.