மனநலம் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களால் பள்ளிக்கு வருவதை தவிர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகை விகிதம் 87.8 சதவீதமாக இருந்தது.
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.5 சதவீதம் வீழ்ச்சி என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உயர்நிலைப் பள்ளி வருகை 84.7 சதவீதமாக பதிவாகியுள்ளது, இது 2021 உடன் ஒப்பிடும்போது 4.1 சதவீதம் குறைவு.
ACT மாநிலத்தில் 6.1 சதவீதம் என்ற அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா – விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அனைத்தும் 05 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்த அளவினை பதிவு செய்துள்ளன.
கிரேடுகளின் அடிப்படையில், 10-11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களால் அதிக சதவிகிதம் வராதது பதிவாகியுள்ளது.