News22 பாம்புகளுடன் விமான நிலையத்திற்குச் சென்ற பெண்

22 பாம்புகளுடன் விமான நிலையத்திற்குச் சென்ற பெண்

-

22 வகையான பாம்புகளுடன் பெண் ஒருவரை சென்னை விமான நிலையத்தில் இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஏ.கே.13 என்ற விமானம் மூலம் கோலாலம்பூரில் இருந்து கடந்த 28ஆம் திகதி சென்னை விமான நிலையத்துக்கு குறித்த பெண் வந்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அவரது பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, ஒரு பச்சோந்தியுடன் பல்வேறு வகையான 22 பாம்புகள் காணப்பட்டன.

இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின், குறித்த விலங்குகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்வது சட்டவிரோதமானது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

அந்த பெண், .இன்று சனிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...