ஆஸ்திரேலிய வரித்துறை அலுவலகத்தின் முன்னாள் துணை ஆணையரின் மகள் லாரன் க்ரான்ஸ்டன், 105 மில்லியன் டாலர் வரி மோசடியில் ஈடுபட்டதற்காக 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
2014-2017 காலப்பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதுடன், அவரது சகோதரர் உட்பட மேலும் 04 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவர்களின் கீழ் உள்ள பல நிறுவனங்கள் ஊடாக இந்த வரி மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
05 வருடங்களின் பின்னர் நல்ல நேரத்தின் அடிப்படையில் சிறைத்தண்டனையை குறைக்கும் வாய்ப்பு லோரன் கிரான்ஸ்டனுக்கு கிடைக்கவுள்ளது.