தெற்கு வியட்நாமின் மஞ்சள் நிறக் கொடி உருவம் கொண்ட நாணயத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டதற்கு வியட்நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நாணயம் இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வியட்நாம் வலியுறுத்துகிறது.
எனவே, பொதுமக்கள் மத்தியில் குறித்த நாணயத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவை அவர்கள் கோருகின்றனர்.
கடந்த ஏப்ரலில், வியட்நாமில் இருந்து ஆஸ்திரேலியாவின் படைகள் வாபஸ் பெறப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், $02 மதிப்புள்ள 85,000 நாணயங்கள் வெளியிடப்பட்டன.
வியட்நாம் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பல அம்சங்களை உள்ளடக்கியதால், இந்த நாணயத்தை கடுமையாக எதிர்ப்பதாக வியட்நாம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த நாணயத்தின் முகப்பில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவம் மற்றும் பின்புறம் ஹெலிகாப்டரின் உருவம் உள்ளது.