நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சுற்றுலாத்துறை தொடர்பான கட்டணங்களையோ, வரிகளையோ அதிகரிக்க வேண்டாம் என மத்திய அரசை இத்துறை வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விமான கட்டணம், சுற்றுலா வரிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரிடமிருந்தும் $60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இது பயணிகள் இயக்கக் கட்டணம் அல்லது (PMC) என அழைக்கப்படுகிறது, இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிகம்.
இது 1978 இல் $10 மதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கட்டணம் விமான கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் இறுதியில் மத்திய அரசாங்கத்திற்கு வரவு வைக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் அடுத்த 05 வருடங்களுக்கு தற்போதைய நிலையான விகிதத்தில் இக்கட்டணம் பேணப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாட்டில் விமானக் கட்டணங்கள் இன்னும் அதிகமாக உள்ளதால், ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் துறையை உயர்த்துவதற்கு இது பெரும் தடையாக இருப்பதாகவும் அத்துறை வல்லுநர்கள் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.