இன்றைய மத்திய பட்ஜெட் ஆவணம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உபரியுடன் கூடிய பட்ஜெட் ஆவணமாக மாறும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன்படி, 2023/24 நிதியாண்டுக்கான செலவினத்தை விட வருமானம் சுமார் 04 பில்லியன் டாலர்கள் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் 04 வருடங்களில் இந்த நிலைமை மீண்டும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையாக மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அங்கம் கிட்டத்தட்ட $15 பில்லியன் வாழ்க்கைச் செலவு நிவாரணப் பொதியாகும்.
குழந்தைப் பராமரிப்புக் கட்டணக் குறைப்பு – ஒற்றைப் பெற்றோர் கொடுப்பனவை விரிவுபடுத்துதல் – மருந்துக் கட்டணக் குறைப்பு மற்றும் வேலை தேடுபவர் கொடுப்பனவு அதிகரிப்பு ஆகியவையும் இதில் அடங்கும்.