Breaking Newsநாடு கடத்தப்பட்ட அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள்

நாடு கடத்தப்பட்ட அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள்

-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் இன்று (09) காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த 41 இலங்கையர்களும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (09) காலை அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ASY-013 விமானத்தில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்த இவர்கள் இன்று காலை 9.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் பல நாள் மீன்பிடி படகுகள் மூலம் கடல் கடந்து அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் பொது சேவையில் காணப்படும் பெரும் பற்றாக்குறை

வளர்ந்து வரும் திட்டத்தை நிர்வகிக்க NDIS அதிகாரிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று அமைச்சர் ஜென்னி மெக்அலிஸ்டர் கூறியுள்ளார். திட்டத்தின் அளவு மற்றும் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு...

Neo-Nazi போராட்டங்களுக்கு கடுமையான சட்டங்கள் தேவை

நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தின் முன் ஒரு Neo-Nazi குழு ஏன் சட்டப்பூர்வமாக போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்...

Desi Freeman-ஐ தேடும் பணியில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்

விக்டோரியா காவல்துறை கொலையாளி Desi Freeman-ஐ தேடும் பணியில், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சந்தேக நபர் தப்பி ஓடிய பிறகு கேட்ட துப்பாக்கிச் சத்தங்களைக் கண்டறிய,...

ஆஸ்திரேலிய வானொலி வரலாற்றின் மன்னர் ஜான் லாஸ் காலமானார்

ஆஸ்திரேலிய வானொலி வரலாற்றில் "The Broadcaster of the Century" என்று அழைக்கப்படும் ஜான் லாஸ் காலமானார். இறக்கும்போது அவருக்கு 90 வயது ஆகும். ஜான் லாஸ் 70...