அவுஸ்திரேலிய மக்களுக்கான நிவாரணங்கள் நேற்றைய வரவுசெலவுத் திட்டத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
சாத்தியமான எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே தொழிற்கட்சி அரசாங்கத்தின் நோக்கம் என இங்கு குறிப்பிடப்பட்டது.
நேற்றைய வரவு செலவுத் திட்டம், வேலை தேடுபவர் – குழந்தைப் பராமரிப்பு – மருத்துவப் பாதுகாப்பு – AusStudy – இளைஞர் கொடுப்பனவு போன்ற அனைத்துப் பகுதிகளுக்கும் அதிகபட்ச நிவாரணம் வழங்குவதற்காக செய்யப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டுகிறார்.
எதிர்காலத்தில் வேலை தேடுபவர் கொடுப்பனவுகளுக்காக வழங்கப்படும் பணத்தின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதியளிக்கிறார்.
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த எதிர்க்கட்சிகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு நாளை அறிவிக்கப்பட உள்ளது.