SportsImpact வீரராக இலங்கை வீரர் - மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை...

Impact வீரராக இலங்கை வீரர் – மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – IPL 2023

-

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பதிரனா, Impact வீரராக களமிறங்கி விக்கெட் வீழ்த்தி மிரட்டினார்.

நாணய சுழற்சியில் வென்ற CSK அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது.

கான்வே 10 ஓட்டங்களும், ரஹானே 21 ஓட்டங்களும், கெய்ட்வாட் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 7 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தூபே (25), ஜடேஜா (21), ராயுடு (23) அதிரடியாக ஓட்டங்கள் குவித்தனர்.

கேப்டன் தோனி 9 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தீபக் சஹர் பந்துவீச்சில் வார்னர் ஓட்டங்கள் எடுக்காமலும், சால்ட் 17 ஓட்டங்களிலும் வெளியேறினர். மார்ஷ் 5 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். அதன் பின்னர் ரோசோவ் , மனீஷ் பாண்டே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது சென்னை அணியில் Impact வீரராக களமிறங்கிய இலங்கையின் பதிரனா மிரட்டலான பந்துவீச்சில் மனீஷ் பாண்டேவை அவுட் செய்து டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இறுதியில் டெல்லி அணி 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அடுத்த சுற்றினை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.

Latest news

குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை வழங்குவதை நிறுத்துங்கள் – UNICEF

பள்ளி வயது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளது என்று UNICEF புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய 5 முதல் 19 வயது...

ஜனவரி முதல் Centrelink-இல் அமலுக்கு வரும் புதிய நடவடிக்கை

ஜனவரி 5, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் Centrelink ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, தகுதியுள்ள குடும்பங்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் குறைந்தபட்சம் 3...

நிறம் மாறிய அந்தோணி அல்பானீஸ்

பசிபிக் தலைவர்களுடனான ஒரு முக்கியமான சந்திப்பிற்கு இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்து வந்த பிறகு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெட்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாநாட்டில் பங்கேற்ற...

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

அடிலெய்டில் பூச்சி பரவலால் பாதிக்கப்பட்டுள்ள காடுகள்

ஜெயண்ட் பைன் செதில் என்பது பைன் மரங்களைக் கொல்லும் ஒரு அயல்நாட்டு பூச்சியாகும், மேலும் இது மனிதர்களால் பரவக்கூடியது. இதுவரை, அடிலெய்டின் வடகிழக்கு புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட...

உலகிலேயே முதன்முறையாக கோலாக்களுக்கு கொடிய chlamydia-இற்கு எதிராக தடுப்பூசி

உலகில் முதன்முறையாக ஆஸ்திரேலிய கோலாக்களுக்கு கிளமிடியாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தடுப்பூசியை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. Sunshine Coast பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், மலட்டுத்தன்மை,...