தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் தோல்வியடைந்த நிதிக் கொள்கைகளால் ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மேலும் உயரக்கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் எச்சரித்துள்ளார்.
மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் இன்னும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அவர் வலியுறுத்துகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய வரவு செலவுத் திட்ட ஆவணம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த வருடத்திற்கான வரவு செலவுத் தொகை மற்றும் கொடுப்பனவுகள் 02 வாரங்களுக்கு 40 டொலர்கள் அல்லது நாளொன்றுக்கு 03 டொலர்களுக்கு குறைவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்காலிக தீர்வுகள் மூலம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.