Sportsகுஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியடைந்த மும்பை இந்தியன்ஸ்...

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியடைந்த மும்பை இந்தியன்ஸ் – IPL 2023

-

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 218 ஓட்டங்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 103 ஓட்டங்கள் விளாசினார்.

ரஷீத் கான் 4 விக்கெட்டுகளை சரித்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான கில் (6) மற்றும் சஹா (2) ஆகியோரை ஆகாஷ் தனது மிரட்டலான பந்துவீச்சில் வெளியேற்றினார்.

பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். தமிழக வீரர் விஜய் சங்கர் தனது பங்குக்கு 14 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார்.

அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்த டேவிட் மில்லரை 41 ஓட்டங்களில் ஆகாஷ் ஆட்டமிழக்க செய்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் ரஷீத் கான் வாணவேடிக்கை காட்டினார்.

இறுதிவரை களத்தில் நின்ற அவர் 32 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார். இதில் 10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். குஜராத் டைட்டன்ஸ் 191 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், மும்பை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Latest news

2024 இல் ஆஸ்திரேலியாவில் வேகமாக வளரும் 10 நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 10 நிறுவனங்களை Australian Financial Review பெயரிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நிறுவனமும் அடைந்த வருடாந்த வளர்ச்சியின் அடிப்படையில் இந்த...

சீனாவில் வலம்வரும் புதுவகை பீட்சா

வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்படும். அவற்றில் சில உணவுகள் வரவேற்பும், சில உணவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகும். அந்த...

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய சட்டம் குறித்த அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பணியிடங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை கருத்தில் கொண்டு...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய சட்டம் குறித்த அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பணியிடங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை கருத்தில் கொண்டு...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த சோகம் – 10 ஆண்டுகள் பூர்த்தி

தலையில் பந்து தாக்கியதில் உயிரிழந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸ் இறந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. 2014 ஆம் ஆண்டு நியூ சவுத்...