நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் அவுஸ்திரேலியர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்தின் போது விடுதியில் 90 பேர் இருந்துள்ளதுடன் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 11 பேர் பற்றிய தெளிவான தகவல் வரவில்லை.
அதனால், உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்படும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குறித்த கட்டிடத்தில் முறையான தீயை அணைக்கும் அமைப்பு இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உத்தரவிட்டுள்ளார்.