தற்போது ஏறக்குறைய 22 மணிநேரம் எடுக்கும் சிட்னி-லண்டன் விமானத்தின் நேரம் அடுத்த தசாப்தத்தில் 02 மணிநேரமாக குறைக்கப்படும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படும் விர்ஜின் கேலக்டிக் போன்ற விண்கலங்களின் பயன்பாடு பிரபலமடைந்து வரும் நிலையில் விமானம் பறக்கும் நேரம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கான டிக்கெட்டின் விலை $650,000 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அதிவேகப் பறப்பினால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும் என்று முதற்கட்ட சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.
தற்காலிக பார்வை இழப்பு மற்றும் உளவியல் பக்க விளைவுகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.