Sportsலக்னோ அணி திரில் வெற்றி- IPL 2023

லக்னோ அணி திரில் வெற்றி- IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 177 ஓட்டங்களை சேர்த்தது.

அணித்தலைவர் குருணால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ஓட்டங்களை சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் சார்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 178 ஓட்டங்களை சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 37 ஓட்டத்தில் அவுட்டானார்.

இஷான் கிஷன் அரை சதமடித்து 59 ஓட்டங்களில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 7 ஓட்டத்திலும், வதேரா 16 ஓட்டத்திலும் அவுட்டாகினர்.

கடைசி கட்டத்தில் டிம் டேவிட் அதிரடியில் மிரட்டினார். அவர் 32 ஓட்டத்திலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், மும்பை அணி 172 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் லக்னோ அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Latest news

இன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று...

உக்ரைன் மீது மீண்டும் டிரோன் தாக்குதல் செய்த ரஷ்ய படைகள்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இந்த நிலையில் உக்ரைனின்...

குயின்ஸ்லாந்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில்...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

உலகின் மிகவும் பிரபலமான உணவகம் என்ற விருதை பெற்றுள்ள சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள கிரவுண்ட்ஸ் ஆஃப் அலெக்ஸாண்ட்ரியா உணவகம் உலகின் மிகவும் பிரபலமான உணவகமாக மாறியுள்ளது. இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான 100 உணவகங்களின் சமீபத்திய ஆய்வின்படி, அலெக்ஸாண்ட்ரியா மைதானம்...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...