டாஸ்மேனியாவில் உள்ள ஒரு பெரிய வீடு கட்டுமான நிறுவனமான மல்டி ரெஸ் பில்டர்ஸ் வணிகத்தை நிறுத்திவிட்டது.
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அதன் செயற்பாடுகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்தில் உள்ள பல கட்டுமான நிறுவனங்கள் சமீபத்திய நாட்களில் திவாலாகிவிட்டதாக அறிவித்துள்ளன.
டாஸ்மேனியாவில் இப்படி ஒரு முன்னணி நிறுவனம் சரிந்தது இதுவே முதல் முறை.