தெற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கும் நபர்களுக்கு எதிரான அபராதத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி அவர்களுக்கு அதிகபட்சமாக 50,000 டொலர் அபராதமும் 03 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
அடிலெய்டு நகரில் தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க மாநில அரசு தயாராகி வருகிறது.
அதற்கான முன்மொழிவு தற்போது மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்காலத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
மக்களின் அமைதியான வாழ்வில் செல்வாக்கு செலுத்த யாருக்கும் உரிமை இல்லை என தெற்கு அவுஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார்.