இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கிற்காக பிரித்தானிய அரசாங்கம் 162 மில்லியன் பவுண்டுகள் அல்லது கிட்டத்தட்ட 304 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ள மாநில தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவே அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்விழாவின் கலாசார அம்சங்களுக்காக கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரசர்களின் இறுதி ஊர்வலம் மற்றும் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பாரிய தொகை செலவிடப்பட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அரச குடும்பத்திற்கு ஆதரவாக பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.