Newsஅவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து...

அவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

-

அவுஸ்திரேலியாவின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் இனவெறி தாக்குதல்களை எதிர்கொண்டதால் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டன் கிரான்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது தொழில்வாழ்க்கையில் எப்போதும் இனவெறியை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள அவர் எனினும் மன்னர் சார்ல்ஸின் முடிசூடும் நிகழ்வை தொகுத்துவழங்கிய பின்னர் தனக்கு எதிராக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பூர்வீக இனத்தை சேர்ந்தவரான ஸ்டன் கிரான்ட் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வை தொகுத்துவழங்கியவேளை காலனித்துவம் தனது மக்களை பாதித்த விதம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

முடிசூட்டும் நிகழ்வின் போது கிரீடம் படையெடுப்பு நிலத்திருட்டு அழித்தொழிக்கும் போரை குறிக்கின்றது என அவர் குறிப்பிட்டிருந்தார்,

எனினும் தனது வார்த்தைகளை சிலர் திரிபுபடுத்தினர்,என்னை வெறுப்பு மிகுந்தவனாக சித்தரித்ததுடன் எனக்கு எதிராக இனவெறிதுஸ்பிரயோகங்களை முன்னெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏபிசி தனது தொகுப்பாளருக்கு எதிரான கொடுரமான துஸ்பிரயோகத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் தனது நிறுவனம் தன்னை பாதுகாக்க தவறிவிட்டது என கிரான்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டன் கிரான்ட் கடந்த நான்கு தசாப்தங்களாக ஊடகத்துறை தொடர்பில் பல விருதுகளை பெற்றதுடன் வர்த்தக தொலைக்காட்சியின் முதலாவது அபோரிஜினியல் தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றார்.

எனினும் வெள்ளிக்கிழமை அவர் ஏபிசியின் நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Latest news

துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு

Bondi பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் நேற்று இரவு செனட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் உரிமையாளர்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்கும்...

இலவச மெட்ரோ சேவையை அதிகம் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை திட்டத்தின் மூலம், விக்டோரியா மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் இலவச வார இறுதி பயணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த கோடையில்...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

சிட்னியில் அதிகரித்து வரும் சுறா தாக்குதல்கள்

கடந்த 60 ஆண்டுகளில் சிட்னியில் சுறா தாக்குதல் எதுவும் நடந்ததில்லை, ஆனால் கடந்த இரண்டு நாட்களில் இதுபோன்ற சுறா தாக்குதல்களால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...