மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு ஆஸ்திரேலியாவில் கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்களை பின்பற்ற முடிவு செய்துள்ளது.
நேற்று (24) பேர்த் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதே இதற்கு உடனடி காரணம் என மாநில பிரதமர் மார்க் மெக்கோவன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நிகழும் துப்பாக்கிச் சூடு தொடர்பான அவலங்கள் ஆஸ்திரேலியாவில் நடக்காமல் இருக்க, இதுபோன்ற கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
தற்போது, மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசிடம் உரிமம் பெற்ற சுமார் 360,000 பதிவு செய்யப்பட்ட துப்பாக்கிகள் உள்ளன.
உத்தேச புதிய சட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் மாநில நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.