அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று (25) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டிடம் முழுவதும் பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பரவ ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது.
கட்டிடத்தின் மேல் தள சுவர் முழுவதும் சாய்ந்து கீழே தெருவில் சிதறியுள்ளது. தரையில் நின்றிருந்த ஒரு வாகனம் தீயில் கருகியது.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த போராடிவருகின்றனர்.
தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால், பொதுமக்கள் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறு தீயணைப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.