கோல்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் Tissues பொதிகளில் பொலித்தீன் பொதிகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலில் ஆண்டுக்கு 13 டன் பிளாஸ்டிக் சேர்வதை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இனிமேல் கோல்ஸ் தயாரிக்கும் Tissues Packaging மூலப்பொருட்களில் 95 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியவை என்பது சிறப்பு.
2025ஆம் ஆண்டுக்குள் அந்த சதவீதத்தை 100 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக கோல்ஸ் அறிவித்துள்ளது.
வரும் ஜூலை முதல் பிளாஸ்டிக் பைகள் விற்பனையை நிறுத்த கோல்ஸ் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.