Sportsமும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்குல் நுழைந்த குஜராத் - IPL 2023

மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்குல் நுழைந்த குஜராத் – IPL 2023

-

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 62 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

மழைக்காரணமாக இன்றைய போட்டி சற்று தாமதமாகவே ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

அந்த வகையில் முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 129 ஓட்டங்களையும், சாய் சுதர்சன் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளில் பெற்ற 3ஆவது சதம் இதுவாகும்.இவர் 60 பந்துகளுக்கு முகங்கொடுத்து 7 நான்கு ஓட்டங்கள், 10 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இந்த சதத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பந்துவீச்சில் மும்பை அணியின் பியூஷ் சவ்லா 45 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை கைப்பற்றினார்.இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட மும்பை அணி களத்தில் இறங்கியது.

இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதனால், குஜராத் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அணிசார்பில் அதிகபடியாக, சூர்யகுமார் யாதவ் 61 ஓட்டங்களையும், திலக் வர்மா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் குஜராத் அணியின் மொஹம்மட் ஷமி 2 விக்கெட்டுக்களையும், மோகித் ஷர்மா 5 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 7 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய,எதிர்வரும் 28ஆம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

சர்வதேச மாணவர்கள் வாடகை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை – RBA

தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, வாடகை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. RBA-வின்...

சர்வதேச மாணவர்கள் வாடகை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை – RBA

தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, வாடகை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. RBA-வின்...

1,000 வேலை வெட்டுக்கு தயாராகும் NSW போக்குவரத்துத் துறை

ஒரு பெரிய நிறுவன மாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக, NSW-க்கான போக்குவரத்துத் துறை 1,000க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல்...