Newsநடுவானில் விமானத்தின் கதவை திறந்த இளைஞன் - மூச்சுத்திணறிய பயணிகள்

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த இளைஞன் – மூச்சுத்திணறிய பயணிகள்

-

தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு விமானம் ஒன்று 2 நாட்களுக்கு முன் புறப்பட்டது.

இந்த விமானத்தில் 194 விளையாட்டு வீரர்கள் உட்பட சுமார் 200 பேர் பயணம் செய்தனர். டேகு விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டபோது அந்த விமானத்தின் கதவு திடீரென திறந்தது. இதனால் விமானத்தில் இருந்த அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

எனவே விமானம் தரை இறங்கியவுடன் அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே விமானத்தின் கதவை திறந்த இளைஞரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்த இளைஞர் தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்ததாக தெரிவித்தார்.

எனினும் விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...