Newsமனித மூளைக்குள் ‘Chip’ வைக்க அனுமதி வாங்கினார் எலான் மஸ்க்

மனித மூளைக்குள் ‘Chip’ வைக்க அனுமதி வாங்கினார் எலான் மஸ்க்

-

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்துவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய நியூராலிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் என பல நிறுவனங்களை நிறுவி உலகின் பெரும் கோடீஸ்வரராக திகழ்பவர் எலான் மஸ்க். இவரது நியூராலிங்க் ஆய்வு நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்துவது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது.

முடக்குவாதம் உள்ளவர்கள், நரம்பு பிரச்சினை, கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கணனி, மொபைல் உள்ளிட்ட சாதனங்களை தொடாமலே மூளையில் அமைக்கும் சிப்பை கொண்டு இயக்குவதுதான் இந்த மைக்ரோ சிப் ஆராய்ச்சியின் முக்கியமான நோக்கம் என சொல்லப்படுகிறது.

குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் பலவற்றிற்கு இவ்வாறாக இந்த சிப் பொருத்தி ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதில் குரங்கு ஒன்று கைகளால் கணனியை தொடாமலே அதில் மைக்ரோசிப் உதவியுடன் கேம் விளையாடுவதான காணொளியும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த சிப்பை மனித மூளையில் பொருத்தி ஆராய்ச்சி செய்ய நியூராலிங்க் நிறுவனம் விண்ணப்பித்திருந்த நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் அமைப்பு இதற்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேசமயம் மூளையில் இதுபோன்ற மைக்ரோ சிப் அமைப்பது அந்த நபரை கட்டுப்படுத்தும் முறையையும் எதிர்காலத்தில் கொண்டு வரும் ஆபத்து உள்ளதாக சிலர் பயத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Latest news

NSW ஹண்டர் பகுதியில் இறந்து கிடந்த பெண் – ஒருவர் கைது

NSW Hunter பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் குடும்ப வன்முறை கொலையில் 20 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 4.45 மணியளவில் தாக்குதல் நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வீட்டிற்கு...

ஆஸ்திரேலியாவில் திரும்பப் பெறப்பட்ட பல சீஸ் பிராண்டுகள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய கடைகளில் விற்கப்படும் பல பிராண்டு சீஸ்கள் பாக்டீரியா மாசுபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் சீஸில் லிஸ்டீரியா வைரஸ் பரவுவதே என்று ஆஸ்திரேலிய...

சர்ச்சைக்குரிய பேச்சால் இஸ்ரேலிய அமைச்சரின் ஆஸ்திரேலிய விசா ரத்து

காசா பகுதியில் உள்ள குழந்தைகளை எதிரிகள் என்று அழைத்த இஸ்ரேலிய அரசியல்வாதி Simcha Rothman, நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினருடன் ஒரு...

Qantas நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த மிகப்பெரிய அபராதம்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணிநீக்க வழக்கில், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்திற்கு 90 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. COVID-19 தொற்றுநோய்களின்...

Qantas நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த மிகப்பெரிய அபராதம்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணிநீக்க வழக்கில், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்திற்கு 90 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. COVID-19 தொற்றுநோய்களின்...

மெல்பேர்ணில் திருடப்பட்ட $1 மில்லியன் மதிப்புள்ள Ferrari கார் குறித்து விசாரணை

மெல்பேர்ண் வீட்டில் இருந்து 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள Ferrari உட்பட நான்கு சொகுசு கார்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை...