Newsஅமெரிக்காவில் நிகழ்ந்த அதிசயம் - இன்ப அதிர்ச்சியில் கன்னியாஸ்திரிகள்

அமெரிக்காவில் நிகழ்ந்த அதிசயம் – இன்ப அதிர்ச்சியில் கன்னியாஸ்திரிகள்

-

அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் ஒரு அதிசயம் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 95-வது வயதில் காலமானார்.

அவரது உடல் மரச்சவப் பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அவரது உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர் சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது மற்ற கன்னியாஸ்திரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் கன்னியாஸ்திரி வில்ஹல்மினா லான்சாஸ்டர் உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன போதிலும் அப்படியே கெடாமல் இருந்தது. அவரது தலைமுடி, மூக்கு, உதடு மற்றும் கண்கள் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது.

முகம் சிரித்த முகத்துடன் காட்சியளித்தது. பொதுவாக யாராவது இறந்து அவரது உடல் புதைக்கப்பட்டால் சில மாதங்களில் அது எலும்புக் கூடாக மாறிவிடும்.

ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கன்னியாஸ்திரி உடல் இருந்ததால் இந்த தகவல் எல்லோர் மத்தியிலும் வேகமாக பேசப்பட்டது.

இதனையடுத்து, ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...