NewsChatGPT மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் அமெரிக்க எழுத்தாளர்

ChatGPT மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் அமெரிக்க எழுத்தாளர்

-

அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து அசத்தியுள்ளார்.

OpenAi என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பள்ளி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலை நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என பல்வேறு துறையினருக்கும் கையில் கிடைத்துள்ள மிகப்பெரிய வரமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் பல ஆண்டுகளாக புனை கதைகள் எழுதி அதை புத்தகங்களாக அச்சிட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டதை அறிந்து, அதை பயன்படுத்தி டிம் பவுச்சர் நூற்றுக்கணக்கான கதைகளை எழுதி அதனை புத்தகங்களாக அச்சடித்து விற்பனை செய்துள்ளார்.

இந்த புத்தகங்கள் தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஒரு நாளைக்கு 500 புத்தகங்கள் வரை விற்பனை ஆவதுடன் சுமார் 2000 அமெரிக்க டாலர்களை இதன் மூலம் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்.

இவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது புத்தகங்களின் ஆங்காங்கே புகைப்படங்களையும் இடம்பெற செய்துள்ளார்.

டிம் பவுச்சர் தன்னுடைய புத்தகங்களை எழுதுவதற்காக Chat GPT உடன் Anthropic’s claude என்கிற Chatbot-யும் பயன்படுத்தி வருகிறார் .

இவரை போலவே தற்போது பலரும் Chat GPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புத்தகங்களை எழுத தொடங்கியுள்ளனர், அத்துடன் அவற்றின் மூலம் வருமானமும் ஈட்டத் தொடங்கியுள்ளனர்.

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...