3,000 இளம் இந்திய தொழில் வல்லுநர்களுக்கு பணி விசா வழங்க ஆஸ்திரேலிய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், 07 துறைகளில் தொழில் செய்பவர்களுக்கு இந்த விசாக்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, பொறியியல் – தகவல் தொழில்நுட்பம் – செயற்கை நுண்ணறிவு – நிதி – எரிசக்தி – விவசாயம் மற்றும் சுரங்கம் ஆகிய தொழில்களில் திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் பணியாற்ற 02 ஆண்டு விசா வழங்கப்படும்.
இந்திய பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்ற 31 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் மட்டுமே இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆஸ்திரேலிய நிரந்தர குடியேற்றத் திட்டத்தில் சேராத சிறப்பு விசா வகையின் கீழ் இது செயல்படுத்தப்பட உள்ளது.