ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச தேசிய ஊதியத்தை 5.75 சதவீதம் உயர்த்த Fair Work கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
இது ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
தற்போது, மணிநேர குறைந்தபட்ச ஊதியம் $21.38 ஆகவும், 38 மணிநேர வாரத்திற்கு $812.60 ஆகவும் உள்ளது.
ஜூலை 1 முதல், மணிநேர குறைந்தபட்ச ஊதியம் $22.60 ஆகவும், 38 மணிநேர வார ஊதியம் $859.32 ஆகவும் அதிகரிக்கும்.
சம்பள உயர்வு கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஆஸ்திரேலியர்களை பாதிக்கும்.
அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியத்தை 6.8 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வாதிட்டன.
ஆனால் 3.5 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்க முடியும் என வணிக உரிமையாளர்கள் மற்றும் முதலாளிகள் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த ஆண்டும் தேசிய குறைந்தபட்ச ஊதியம் 5.2 சதவீதம் உயர்த்தப்பட்டது.