இங்கிலாந்தில் 750 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பிரபு தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள நீதித்துறையை வழிநடத்தும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான டேம் சூ கார் (58 வயது) மற்றும் டேம் விக்டோரியா ஷார்ப் (67 வயது) ஆகியோர் இந்த பதவிக்கான இரண்டு இறுதிப் போட்டியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
பிரபு தலைமை நீதிபதி என்பது தற்போது ஆண்களுக்கு மட்டுமேயான தலைப்பு என்பதால், பெண் தலைமை நீதிபதி என்ற தலைப்புக்கு இடமளிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டியிருக்கலாம் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
இந்த பதவி முதன்முதலில் 1268 இல் உருவாக்கப்பட்டது என்பதால், 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த பதவியை வகித்ததாக கூறப்படுகிறது.
பதவியை வகிக்கும் முதல் பெண் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் லார்ட் சான்சலரும் நீதித்துறை செயலாளருமான அலெக்ஸ் சாக் அவர்களால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி முடிவு மன்னரால் அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழன்