விக்டோரியா மாநில அரசு மனநல சிகிச்சை பெறும் போது பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளான நோயாளிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் பரிந்துரையை பெற்றுள்ளது.
இனிமேல் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பது மற்றும் சேதங்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட 6 முன்மொழிவுகள் இதில் உள்ளன.
விக்டோரியாவில் மனநல சேவைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக இந்த நிபுணர் குழு மாநில அரசால் நியமிக்கப்பட்டது.
விக்டோரியா அரசு இந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் ஏதாவது ஒரு வகையில் அமல்படுத்துவதாக அறிவித்தால், உளவியல் பாதிப்புக்கு மன்னிப்புக் கேட்ட முதல் மாநில அரசு என்ற பெருமையையும் பெறுவார்கள்.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் விக்டோரியா சுகாதார திணைக்களத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.