Newsகுயின்ஸ்லாந்து பள்ளிகளில் பதிவு செய்யப்படாத ஆசிரியர்கள் 7 மடங்கு உயர்வு

குயின்ஸ்லாந்து பள்ளிகளில் பதிவு செய்யப்படாத ஆசிரியர்கள் 7 மடங்கு உயர்வு

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்க அனுமதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத ஆசிரியர்களின் எண்ணிக்கை 07 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு, குயின்ஸ்லாந்து ஆசிரியர் கல்லூரி இதுவரை ஆசிரியர்களாக முழுமையாக தகுதி பெறாத 888 பயிற்சியாளர்களுக்கு ஒப்புதல் அளித்தது.

இக்குழுவில் 95 வீதமானவர்கள் கற்பித்தல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் எஞ்சிய 05 வீதமானவர்கள் ஏனைய பட்டப்படிப்புகளை பயிலும் மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 2021 இல், இந்த எண்ணிக்கை 363 ஆகவும், 2020 இல் 211 ஆகவும், 2019 இல் 177 ஆகவும் இருந்தது.

2018 ஆம் ஆண்டில், 129 பேருக்கு மட்டுமே அத்தகைய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் கற்பிக்க பதிவு செய்யப்படாத 299 ஆசிரியர்கள் அங்கீகாரம் பெற்றுள்ளனர், மேலும் இது ஆண்டின் இறுதியில் 1,000 ஐத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறையைத் தவிர்க்க இந்த விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குயின்ஸ்லாந்து ஆசிரியர் கல்லூரி வலியுறுத்துகிறது.

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...