Breaking News2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த...

2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய குழந்தை

-

இந்தியாவின் பீகார் மாநிலம், சாப் ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு வைத்தியர்கள் பிரசவம் பார்த்தனர்.

இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த குழந்தையை வைத்தியர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த வைத்தியசாலை முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை வைத்தியர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

நன்றி தமிழன்

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...