டைட்டானிக் கப்பலின் சிதைவைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போயுள்ளது.
அதனை தேடும் பாரிய நடவடிக்கையை அமெரிக்க மற்றும் கனேடிய கடலோர காவல்படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணத்தை ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பயண நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலின் கப்டன் உட்பட 5 பேர் இந்த பயணத்தில் ஒன்றாக இருந்துள்ளனர்.
இவர்களில் 58 வயதுடைய நபர் ஒருவர் பிரபல பிரித்தானிய வர்த்தகர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கான டிக்கெட்டின் விலை 250,000 அமெரிக்க டாலர்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் 4 நாட்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பதால், அந்தக் கப்பலில் உள்ளவர்களை பாதுகாப்பாகக் காப்பாற்றும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.