சீனா ஆஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தல் என்று நம்பும் ஆஸ்திரேலியர்களின் சதவீதம் சற்று குறைந்துள்ளது.
சீனாவுடனான உறவை மீண்டும் வலுப்படுத்த தற்போதைய தொழிலாளர் கட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளே இதற்குக் காரணம்.
2021 ஆம் ஆண்டில், 63 சதவீத ஆஸ்திரேலியர்கள் சீனாவை அச்சுறுத்தலாகக் கருதினர், ஆனால் இப்போது அந்த சதவீதம் 56 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், அடுத்த 20 ஆண்டுகளில், சீனா, ஆஸ்திரேலியாவுக்கு 75 சதவிகிதம் வரை பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிற நாடுகளில் இருந்து வரும் சைபர் தாக்குதல்கள் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் என்று 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.