Newsசவுதியில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி சொகுசு கட்டிடம்

சவுதியில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி சொகுசு கட்டிடம்

-

சவுதி அரேபியாவின் ஹெக்ராவில் புகழ்பெற்ற பாறைகளில் செதுக்கப்பட்ட கட்டிடக்கலை தளம் உள்ளது. அதனருகில் பாலைவனம் ஒன்றுள்ளது.

அதில் மராயா என்ற பெயரில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அரபு மொழியில் ‘மராயா’ என்ற சொல்லுக்கு ‘எதிரொளிப்பு’ எனப் பொருள்.

இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ஜியோ பார்மா ஸ்டுடியோ மற்றும் பிளாக் இன்ஜினியரிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் இந்த நவீன கண்ணாடி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

பாலைவனத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கண்ணாடி கட்டிடம் அமைப்பது சாதாரணமான காரியம் இல்லை. ஏனெனில் கண்ணாடியின் எதிரொளிப்பால் வீட்டின் உள்ளே வெப்பம் அதிகமாகும்.

மராயா கண்ணாடி கட்டிடத்தின் மேற்கூரை பாலைவனத்தின் காட்சிகளை பார்த்து இரசிக்கும்படி அமைந்துள்ளது. மராயாவில் நட்சத்திர உணவகம், இசை நிகழ்ச்சிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

மராயாவுக்கு வரும் பார்வையாளர்கள் இளஞ்சிவப்பு சூரிய அஸ்தமன ஒளி முதல் மின்னும் விடியல் வரை அனைத்தையும் பார்த்து இரசிக்கின்றனர்.

அது நாளின் ஒவ்வொரு மணித்துளிகளையும் முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக மாற்றுகிறது. சில பார்வையாளர்கள் கட்டிடத்தின் உள்ளே செல்ல தயங்குகிறார்கள்.

எனவே அவர்கள் வெறுமனே மராயாவுடன் புகைப்படங்கள் மட்டும் எடுத்து கொள்கின்றனர்.

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...