சைபர் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஆஸ்திரேலியர்கள் தங்கள் மொபைல் போன்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அணைத்து, மறுதொடக்கம் செய்யுமாறு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.
இதன் மூலம் சைபர் கிரைமினல்களால் அங்கீகரிக்கப்படாத அணுகல் வாய்ப்புகள் குறையும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சைபர் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு இது நிரந்தரத் தீர்வாகாது, ஆனால் தொடர்ந்து செய்வதன் மூலம் சில முடிவுகளை அடைய முடியும் என்று அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு இரவும் 05 நிமிடங்களுக்கு அனைத்து அவுஸ்திரேலியர்களும் தமது கைத்தொலைபேசிகளை அணைக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சைபர் கிரைமினல்களால் அதிகம் இலக்கு வைக்கப்படும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா கருதப்படுகிறது.