விக்டோரியா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.
பள்ளி வளாகங்கள் அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சூழலாக இருக்க வேண்டும் என்று மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் குறிப்பிட்டார்.
இந்த இறுதி அறிக்கையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் தொடர்பாகவும் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விக்டோரியா மாநில எதிர்க்கட்சி வலியுறுத்துகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அடையாளத்தை பாதுகாத்து சாட்சியமளிக்கும் முறை வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.