13-வது உலக கிண்ண கிரிக்கெட் இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டிகள் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. உலக கிண்ண கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து , அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.
மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச்சுற்று போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் 2 அணிகள் உலக கிண்ண போட்டியில் விளையாடும். இந்த போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் உலக கிண்ண போட்டியை பிரபலப்படுத்த ICC புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அது என்னவென்றால் உலக கிண்ண டிராபியை பிரத்யேக பலூனில் வைத்து பூமியில் இருந்து சுமார் 1.20 இலட்சம் அடி உயரத்தில் வளிமண்டலத்தின் விளிம்பில் கிண்ணம் நிலை நிறுத்தப்பட்டது.
இன்று முதல் 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கிண்ணம் வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும்.
முதல்முறையாக விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட கிண்ணம் என்ற பெருமையை ICC ஒருநாள் உலக கிண்ணம் பெற்றுள்ளது.
நன்றி தமிழன்