ஆஸ்திரேலியாவில் வாகனத் திருட்டுகள் மற்றும் சொத்துக் கொள்ளைகள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகரித்துள்ளன.
புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாகனத் திருட்டு 11 சதவீதமும், சொத்து திருட்டு 09 சதவீதமும், சில்லறை விற்பனைக் கடை திருட்டு 08 சதவீதமும் அதிகரித்துள்ளது.
மேலும், கோவிட் தொற்றுநோய்களின் போது குறைந்திருந்த பாலியல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு மீண்டும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், 2021 உடன் ஒப்பிடும்போது, விக்டோரியா மாநிலத்தில் பாலியல் வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்துள்ளது.
ஆனால், குயின்ஸ்லாந்து – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் வடக்குப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், முந்தைய ஆண்டுகளை விட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.