‘ஒஸ்கர் விருதுகள்’ தேர்வுக் குழு உறுப்பினராக இயக்குநர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வருகின்ற 2023-ஆம் ஆண்டு ஒஸ்கர் விருதுகளை தேர்வு செய்யும் குழுவுக்கு இந்தியர்கள் உட்பட மொத்தம் 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஏற்கெனவே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினராக உள்ள நிலையில், தற்போது இயக்குநர் மணிரத்னமும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஒஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரும் தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி தமிழன்