Newsஅதிகரிக்கப்பட உள்ள தற்காலிக திறமையான தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்

அதிகரிக்கப்பட உள்ள தற்காலிக திறமையான தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்

-

தற்காலிக திறன்மிக்க தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் இன்று முதல் அதிகரிக்கப்பட உள்ளது.

இதன்படி, முதலாளியின் அனுசரணையுடன் கூடிய திறமையான தொழிலாளிக்கு குறைந்தபட்ச வருடாந்த சம்பளம் $53,000 இன்றிலிருந்து $70,000 ஆக உயரும்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இன்று முதல் விசா விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுலா விசா விண்ணப்பத்திற்கான கட்டணம் $190 ஆகவும், வாழ்க்கைத் துணைக்கு (dependent) விசா விண்ணப்பக் கட்டணம் $8850 ஆகவும் உயரும்.

மாணவர் வீசா விண்ணப்பக் கட்டணம் இன்று முதல் $710 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த திறன்மிக்க தொழிலாளர் விசா விண்ணப்பத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணம் $4640 ஆகும்.

இன்று முதல், குடியுரிமை விண்ணப்பத்திற்கு $540 கட்டணம் வசூலிக்கப்படும்.

Latest news

சவுதி அரேபியாவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கட்டிடம்

சவுதி அரேபியாவில் 50 பில்லியன் டொலர் மதிப்பில் 'முகாப்” என்ற திட்டமான உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியாத்தில் அமையவுள்ள இத்திட்டமானது...

ஒன்றே குலம் ஒருவனே தேவன் – தவெக இன் தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் பேசிய குறித்த கட்சியின் தலைவர் விஜய், அரசியல் தொழில்நுட்பம் மட்டும் தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக்கூடாதா?...

ஆஸ்திரேலியா வருபவர்கள் இனி இந்த தொலைபேசிகளை கொண்டுவர வேண்டாம்

ஆஸ்திரேலியாவிற்கு இலத்திரனியல் சாதனங்களைக் கொண்டு வருவதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவல்கள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியாவில் 3G சேவைகள் முற்றாக...

கைதிகளால் நிரம்பி வழியும் ஆஸ்திரேலிய மாநில சிறைகள்

அதிக எண்ணிக்கையிலான கைதிகளை அவசர திட்டத்தின் கீழ் மாற்றுவதற்கு வடமாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அப்பகுதியில் வேகமாக அதிகரித்து வரும் சிறைவாசிகளின் எண்ணிக்கையால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதற்காகவே இந்த...

டிக்கெட் மோசடிகளில் சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் டிக்கெட் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் மில்லியன் கணக்கான டாலர்களை இழந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முக்கிய...

குயின்ஸ்லாந்தின் 41வது பிரதமராக David Crisafulli பதவியேற்பு

சிறிது நேரத்திற்கு முன்பு, குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் புதிய மாநில முதல்வராக David Crisafulli பதவியேற்றார். அதன்படி, குயின்ஸ்லாந்தின் 41வது பிரதமராக David Crisafulli பதிவுகளில் இணைகிறார். மாநிலத்தின்...