ஆஸ்திரேலியாவின் முதல் இலவச விந்து மற்றும் முட்டை வங்கி விக்டோரியாவில் நிறுவப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்த கருவுறுதல் உள்ளவர்கள் அந்த சேவைகளை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
இருப்பினும், அதற்கு மருத்துவ அனுமதியும் கட்டாயம்.
தகுதியான விக்டோரியர்கள் விந்து மற்றும் முட்டைகளை மருத்துவமனைக்கு தானம் செய்ய முடியும்.
இதன் மூலம் ஒரு வருடத்தில் சுமார் 3,500 சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என நம்பப்படுவதாக விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
வழக்கமாக ஒரு சிகிச்சைக்காக செலவிடப்படும் 4,000 முதல் 10,000 டாலர்கள் வரையிலான தொகையைச் சேமிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.