சிட்னி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பல உள்நாட்டு விமானங்கள் தொடர்ந்து 4வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன.
விமான நிலையத்திற்கு வரும் வரை தங்களது விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலைமையினால் தமது பயணத்திட்டங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மோசமான வானிலை உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிட்னி விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று காலை பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.