டுவிட்டரில் நபரொருவர் பார்வையிடக் கூடிய டுவிட்டுக்களின் எண்ணிக்கையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இணைய தரசு குற்றங்களை தவிர்க்கு நோக்கில் தற்காலிகமாக இந்த அவசர தீர்மானம எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான எலன் மஸ்க் தெரிவித்துள்ளாா்.
அதற்கமைய, சரிபார்க்கப்பட்ட 08 டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டகணக்குக்காக நாளொன்றுன்னு 8000 டுவிட்டுக்களை பார்வையிட முடியும் என்று அவர் அறிவித்திருக்கிறாா்.
சரிபார்க்கப்படாத அல்லது இலவசமாக செயற்படும் கணக்குகளினூடாக நாளாந்தம் 800 டுவிட்டுக்களே அறிக்கையிடப்படும்.
இன்னும் சரிபார்க்கப்படாத கணக்களினூடாக நாளாந்தம் 400 டுவிட்டுக்களையே பார்வையிடக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டாா்.