இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…புதிதாக 12,899 பேருக்கு கொரோனா தொற்று

0
289

இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கோவிட் பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 12,899 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,96,692ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 72,474ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 15 உயிரிழப்புகள் பதிவான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,24,855ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் பாதிப்பு விகிதத்தை குறிக்கும் டெஸ்ட் பாசிடிவிட்டி விகிதம் நேற்றும் 2.89 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4,46,387 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொண்டுள்ளது. நேற்றை தினத்தை ஒப்பிடுகையில் இன்று நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,366 உயர்ந்துள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது. நாட்டில் கோவிட்-19 தொற்றில் BA.2 மற்றும் BA.2.38 ஆகிய வகைகளே பெரும்பாலும் காணப்படுகின்றன. இவை ஒமைக்ரான் வகை தொற்றுகளின் பிரிவு என்பதால் இதன் புதியவகைகள் அல்லது உருமாறிய வகைகள் நாட்டில் பரவி வருகிறதா என்பதை கண்காணிக்க 1,000க்கும் மேற்பட்ட கோவிட் பாதிப்புகளை கொண்ட மாநிலங்களிடம் பாதிப்பு மாதிரிகளை மத்திய அரசு கோரியுள்ளது.

அதன்படி மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் குஜராத் ஆகிய 10 மாநிலங்களிடம் பாதிப்பு மாதிரிகளை அதிகம் அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவற்றின் மரபணு சோதனை மூலம் எந்த வகை தொற்று பரவி வருகிறது என்பதை தொடர்ந்து கண்காணிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

Previous articleபெர்த் நோர்த் தமிழ் பாடசாலையில் நடந்த தமிழ் ஊக்குவிப்பு போட்டி
Next articleபிஎம்டபிள்யூ பைக்கில் ஐரோப்பாவை வலம் வரும் அஜித்